
ஐபிஎல் தொடரில் முன்ன்னணி அணியாக வலம் வந்த டெல்லி கேப்பிடல்ஸ், இந்தாண்டு சிக்கலில் உள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 6 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
தற்போதைக்கு ஆர்சிபி அணி 4ஆவது இடத்தில் இருந்து வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இன்னும் மீதம் 2 போட்டிகள் உள்ளன. இந்த இரண்டிலுமே வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதன்படி அடுத்ததாக வரும் 16ஆம் தேதி திங்கட்கிழமையன்று பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் வாழ்வா? சாவா? என களமிறங்குகிறது.
இந்நிலையில் டெல்லி அணிக்கு கூடுதல் பலமாக பிரித்வி ஷாவின் உடல்நிலை குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அந்த அணியின் அதிரடி ஓப்பனரான பிரித்வி ஷா கடந்த 3 போட்டிகளாக விளையாடவில்லை. டைபாய்ட் காய்ச்சல் தீவிரமாக இருந்ததால் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.