ஐபிஎல் 2022: அதிகரிக்கும் கரோனா எண்ணிக்கை; ரத்தாகிறதா ஐபிஎல்?
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திட்டமிட்டபடி தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்று வருகிறது. எனினும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குள் மட்டும் கரோனா தொற்று நுழைந்தது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பார்ஹார்ட்டிக்கு கரோனா உறுதியானதாக 16ஆம் தேதி தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுக்காக காத்திருந்தனர்.
Trending
இது ஒருபுறம் இருக்க, இன்று காலை திடீரென வீரர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த மிட்செல் மார்ஷுக்கு தான் பாதிப்பு இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து ஒட்டுமொத்த வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது மேலும் 2 வீரர்களுக்கு கரோனா உறுதியானது. டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் மற்றும் அணி நிர்வாகி ஒருவருக்கு கரோனா உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பயிற்சி வகுப்புகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் டெல்லி அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது. வீரர்கள் 7 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதால், ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now