ஐபிஎல் 2022: முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் குஜராத் டைட்டன்ஸும் விளௌயாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரிதிமான் சஹா 5 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கிய மேத்யூ வேட் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியாவும் 11 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, 9.1 ஓவரில் 53 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது குஜராத் டைட்டன்ஸ் அணி.
Trending
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடிய தொடக்க வீரர் ஷுப்மன் கில் 63 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். டேவிட் மில்லர் அவரது பங்கிற்கு 26 ரன்கள் அடித்தார். ராகுல் டெவாட்டியா 16 பந்தில் 22 ரன்கள் அடித்தார். இன்னிங்ஸின் எந்த சூழலிலும் குஜராத் அணி அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்ய அனுமதிக்காமல் லக்னோ அணி பவுலர்கள் கட்டுக்கோப்புடன் சிறப்பாக பந்துவீசினர்.
20 ஓவரில் 144 ரன்கள் அடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 145 ரன்கள் என்ற இலக்கை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கும் தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் டி காக், கேஎல் ராகுல், கரண் சர்மா, குர்னால் பாண்டியான், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டன் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த தீபக் ஹூடாவும் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் 13.5 ஓவர்களில் லக்னோ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்களை மட்டுமே சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now