ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோவை வீழத்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது ஆர்சிபி!
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் 15ஆவது சீசனில் இன்று நடந்துவரும் எலிமினேட்டரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும். கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் இந்த போட்டி 40 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது.
டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபாஃப் டுப்ளெசிஸ் கோல்டன் டவுட்டாக, மேக்ஸ்வெல் 9 ரன்னிலும், விராட் கோலி 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆர்சிபி அணியின் முக்கியமான 3 வீரர்களும் சோபிக்காதபோதிலும், அதிரடியாக ஆடிய இளம் வீரர் ரஜத் பட்டிதார் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினார். பட்டிதாருடன் இணைந்து தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் ஆடினார்.
Trending
கோலி, ஃபாஃப், மேக்ஸ்வெல் ஆகிய 3 பெரிய வீரர்களும் சொதப்பிய நிலையில், ரஜத் பட்டிதார் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினார். அதிரடியாக ஆடிய ரஜத் பட்டிதார், 54 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 112 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இந்த சீசன் முழுக்க ஆர்சிபிக்காக இன்னிங்ஸ்களை சிறப்பாக முடித்துக்கொடுத்த தினேஷ் கார்த்திக், இந்த போட்டியிலும் 23 பந்தில் 37 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார்.
20 ஓவரில் 207 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 208 ரன்கள் என்ற கடின இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டி காக் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து களமிறங்கிய மனன் வோரா அதிரடியாக விளையாடி 19 ரன்களோடு ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கேஎல் ராகுல் - தீபக் ஹூடா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரைசதம் கடந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த தீபக் ஹூடா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 9 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் மனம்தளராமல் விளையாடிய கேஎல் ராகுலும் 79 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த குர்னால் பாண்டியாவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை மட்டுமே எடுத்தது.
Win Big, Make Your Cricket Tales Now