Advertisement

ஐபிஎல் 2022 : ராகுல், ஹூடா அதிரடி; ஹைதராபாத்திற்கு 170 டார்கெட்!

ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 04, 2022 • 21:16 PM
Ipl 2022 Lucknow Super Giants Post A Total Of 169 Runs After A Bleak Start in Tamil -
Ipl 2022 Lucknow Super Giants Post A Total Of 169 Runs After A Bleak Start in Tamil - (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் குயிண்டன் டி காக், எவின் லூயிஸ் தலா ஒரு ரன்னுடன் வாஷிங்டன் சுந்தரின் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

Trending


பின்ன களமிறங்கிய மனீஷ் பாண்டேவும் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கேஎல் ராகுல் - தீபக் ஹூடா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 51 ரன்களில் தீபக் ஹூடா  ஆட்டமிழந்தார்.

அதன்பின் ராகுலுடன் இணைந்த ஆயூஷ் பதோனியும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை விளாச, மறுமுனையிலிருந்த கேஎல் ராகுல் 68 ரன்களிலும், குர்னால் பாண்டியா 4 ரன்களிலும் நடராஜனின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.

இறுதியில் ஆயூஷ் பதோனி அதிரடியாக விளையாடி அணிக்கு உதவினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், நடராஜன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement