
IPL 2022 Mega Auction - From Ishan Kishan's Record Bid To Suresh Raina's Empty Bid, Day 1 Report (Image Source: Google)
2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதல் நாள் நேற்று முடிவடைந்தது.
கடைசி நேரத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடந்தது. இதில் முதல் ஆளாக, கடந்த சீசனில் பெங்களூரு அணிக்கு கீப்பராக இருந்த கேஎஸ் பரத்தை ரூ.2 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி.
இதேபோல், உத்தராகண்ட் வீரர் அனுஜ் ராவத் பெங்களூரு அணியால் ரூ.3.4 கோடிக்கு வாங்கப்பட்டார். பிரப்சிம்ரன் சிங்கை பஞ்சாப் அணி ரூ.60 லட்சத்துக்கு வாங்கியது. குஜராத்தின் ஷெல்டன் ஜாக்சன் கொல்கத்தா அணியால் ரூ.60 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.