
IPL 2022 Mega Auction: IPL teams targeting Rahul, Ashwin! (Image Source: Google)
அடுதாண்டு ஐபிஎல் தொடர் முதல் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த ஆண்டு இத்தொடரில்10 அணிகள் பங்கேற்கின்றன.
இத்தொடருக்காக ஏற்கனவே உள்ள 8 அணிகளும் மொத்தம் 27 வீரர்களை தக்க வைத்தது. புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் தலா 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், சுரேஷ் ரெய்னா, அஸ்வின், சுப்மன்கில் உள்ளிட்ட வீரர்களை எடுக்க புதிய அணிகள் ஆர்வத்துடன் உள்ளன. கடந்த சீசனில் ராகுல் பஞ்சாப் அணியிலும், அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியிலும், ரெய்னா சென்னை அணியிலும், சுப்மன்கில் கொல்கத்தா அணியிலும் விளையாடினார்கள்.