
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15ஆவது ஐபிஎல் சீசனுக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி பெரிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அந்தவகையில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடரானது நடைபெற உள்ளது.
இந்த இரண்டு புதிய அணிகளின் வருகையால், ஐபிஎல் தொடரில் ல் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் என 10 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த தொடருக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு பேரை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும் மற்ற வீரர்களை ஏலத்தில் விடவேண்டும் என்றும் பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வாக சமீபத்தில் வெளியிட்டன.