
IPL 2022: Outstanding hitting, it was Russell muscle for serious, says KKR captain Shreyas Iyer (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடர்ந்து 2ஆவது முறையை வெற்றியை ருசித்துள்ளது.
ஏப்ரல் 6 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்க உள்ளது. இந்நிலையில், நேற்றைய போட்டியின் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் கே.கே.ஆர்.கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், தெரிவித்துள்ளதாவது:
“அவர் (ரஸ்ஸல்) மிகவும் தெளிவாக விளையாடுவதை பார்ப்பது மிகவும் நிம்மதியாக இருந்தது. இது அவரது சிறப்பான அதிரடி ஆட்டம். நான் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். வயதாகி கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் அவர் வலுவாகி வருகிறார் என்று நான் சொன்னேன்.