
IPL 2022: Punjab Kings acquires all-rounder Shahrukh Khan for Rs 9 cr (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான் பெரிய தொகையில் ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், டி20யில் அணிக்கு அதிரடி ஃபினிஷிங் அவசியம். அவருக்கு அடிப்படை விலை ரூ. 40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தொடக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர், கொல்கத்தா போட்டியிலிருந்து விலகியதையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் சென்னையுடன் மோதியது. இரண்டு அணிகளும் மாற்றி மாற்றி ஏலம் எடுக்க விலை ரூ. 7 கோடியைத் தாண்டியது.