Advertisement

ஐபிஎல் 2022: ரஷித் கான் அதிரடியில் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி!

ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றிபெற்றது.

Advertisement
IPL 2022: Rashid Khan & Rahul Tewatia Power GT To Thrilling 5-Wicket Win Against SRH
IPL 2022: Rashid Khan & Rahul Tewatia Power GT To Thrilling 5-Wicket Win Against SRH (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 27, 2022 • 11:30 PM

ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 27, 2022 • 11:30 PM

முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கேன் வில்லியம்சன் 5 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கிய ராகுல் திரிபாதி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மாவும் மார்க்ரமும் இணைந்து 96 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த அபிஷேக் ஷர்மா, 42 பந்தில் 65 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சுழல் ஜாம்பவான் ரஷீத் கான் பவுலிங்கை சிக்ஸர்களாக விளாசினார் அபிஷேக்.

Trending

அபிஷேக்கை தொடர்ந்து மார்க்ரமும் அரைசதம் அடித்தார். மார்க்ரம் 56 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் ஷஷான்க் சிங் அதிரடியாக ஆடினார். ஃபெர்குசன் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார்.வெறும்  6 பந்தில் 25 ரன்களை விளாசினார் ஷஷான்க் சிங். 20 ஓவரில் 195 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, 196 ரன்கள் என்ற கடின இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு விருத்திமான் சஹா - சுப்மன் கில் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சுப்மன் கில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உம்ராம் மாலிக் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் உம்ரான் மாலிக்கின் வேகத்தில் வீழ்ந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் இழக்க மறுமுனையில் அதிரடியாக விளையாடிய விருத்திமான் சஹா 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சஹாவும் 68 ரன்களில் உம்ரான் மாலிக்கிடம் வீழ, அடுத்து வந்த மில்லர், அபினவ் மனோகர் ஆகியோரும் உம்ரான் மாலிக்கின் யார்க்கருக்கு இறையாகினர். இதன்மூலம் உம்ரான் மாலிக் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ராகுல் திவேத்தியா - ரஷித் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். அதிலும் கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றிபெற 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இறுதியில் ரஷித் கான் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி குஜராத் டைட்டன்ஸுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி பந்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement