ஐபிஎல் 2022: மும்பை தக்கவைக்கும் வீரர்களின் விவரம்!
மும்பை அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்ட பாண்டியா சகோதரர்களை மும்பை அணி இம்முறை கழட்டி விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14வது ஐபிஎல் தொடரை சென்னை அணி கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு பின்னர் தற்போது 15ஆவது ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. காரணம் இந்த 15ஆவது ஐபிஎல் தொடர் கட்டாயம் இந்தியாவில்தான் நடத்தப்படும் என்றும் அதில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் சேர்ந்து புதிதாக இரண்டு அணிகள் இந்த தொடரில் விளையாடும் என்று பிசிசிஐ தரப்பில் உறுதி செய்யப்பட்டது.
அதன்படி 2 புதிய அணிகள் ஏலத்தில் வாங்கப்பட்ட நிலையில், இந்த ஐபிஎல் தொடருக்கான அட்டவணையும் கிட்டத்தட்ட தயாராகி உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணிகளில் தக்க வைக்கப்படும் 4 வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் அவர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளது.
Trending
இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணிகளில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் எந்த 4 வீரர்களை தக்க வைக்கப் போகிறது ? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.
இந்நிலையில் மும்பை அணி தக்கவைக்கும் நான்கு பேர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. முதல் நபராக ரோகித் சர்மாவை மும்பை அணி கேப்டனாக தக்கவைக்கிறது. அதேபோன்று வெளிநாட்டு வீரர்களில் ஒரே ஒரு வீரராக அனுபவ மற்றும் டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரரான பொல்லார்டு தக்க வைக்கப்படுகிறார்.
மேலும் இரண்டு வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மும்பை அணியால் தக்க வைக்கப்படுகின்றனர். இவர்களில் நால்வரை அடிப்படையாக கொண்டு ஒரு புதிய கோர் அணியை உருவாக்க மும்பை அணி உத்தேசித்துள்ளது. மேலும் மும்பை அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்ட பாண்டியா சகோதரர்களை மும்பை அணி இம்முறை கழட்டி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now