Advertisement

ஐபிஎல் 2022: தக்கவைக்கப்பட்ட வீரர்களும், வாங்கப்பட்ட தொகையும்!

ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட தொகைக் குறித்த விவரங்களை பார்ப்போம்.

Advertisement
IPL 2022 Retention Live Updates
IPL 2022 Retention Live Updates (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 30, 2021 • 10:23 PM

ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 30, 2021 • 10:23 PM

இதனால் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். அந்தவகையில், இன்றுதான் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட இன்றே கடைசி நாள்.

Trending

இதனால் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 

ஐபிஎல் அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களும் வாங்கப்பட்ட தொகைகளும்

  • மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (16 கோடி), ஜஸ்ப்ரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), பொல்லார்டு (6 கோடி).
  • ஆர்சிபி - விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல்(11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி).
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன்(14 கோடி), ஜோஸ் பட்லர் (10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி).
  • பஞ்சாப் கிங்ஸ் - மயன்க் அகர்வால் (12 கோடி), அர்ஷ்தீப் சிங் (4 கோடி)
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கேன் வில்லியம்சன்(14 கோடி) , அப்துல் சமாத் (4 கோடி), உம்ரான் மாலிக்(4 கோடி)
  • சிஎஸ்கே - எம் எஸ் தோனி (12 கோடி), ரவீந்திர ஜடேஜா (16 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி), மொயின் அலி (8 கோடி)
  • கேகேஆர் - சுனில் நரைன்( 6 கோடி), ஆண்ட்ரே ரஸ்ஸல் (12 கோடி), வருண் சக்கரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி)
  • டெல்லி கேபிடள்ஸ் - ரிஷப் பந்த் (16 கோடி), பிரித்வி ஷா (7.5 கோடி), அண்ட்ரிச் நோர்ட்ஜே (6.5 கோடி), அக்ஸர் படேல் (9 கோடி).

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement