ஐபிஎல் 2022: லாம்ரோர், தினேஷ் கார்த்திக் அதிரடி; சிஎஸ்கேவுக்கு 174 டார்கெட்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 49 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 62 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக சேர்த்தனர்.
Trending
அதன்பின் 38 ரன்கள் எடுத்திருந்த டூ பிளெசிஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த க்ளென் மேக்ஸ்வெல் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த ராஜத் படித்தர் - மஹிபால் லாம்ரோர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 21 ரன்களில் படித்தர் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த லாம்ரோரும் 42 ரன்கள் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதிலும் மஹீஷ் தீஷனா வீசிய 19ஆவது ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
ஆனால் கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசிய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது.
Win Big, Make Your Cricket Tales Now