
IPL 2022: Umran Malik aims to dismiss Virat Kohli in upcoming match (Image Source: Google)
ஐபிஎல் 2022 போட்டிக்காக உம்ரான் மாலிக்கை ரூ. 4 கோடிக்குத் தக்கவைத்துக் கொண்டது சன்ரைசர்ஸ் அணி. இந்த வருடம் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிவேகமாகப் பந்துவீசி கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய உம்ரான் மாலிக், “லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல். ராகுலின் விக்கெட்டை எடுக்க நினைத்தேன். ஆர்சிபிக்கு எதிராக அடுத்து விளையாடுகிறோம். இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க ஆசைப்படுகிறேன்.
இருவருக்கும் நான் மிகப்பெரிய ரசிகன். என்னால் நூறு சதவீத உழைப்பைத்தான் செலுத்த முடியும். மற்றதெல்லாம் கடவுளின் கையில்” என்று கூறியுள்ளார்.