
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 18ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மொஹாலியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் - பிரப்சிம்ரன் சிங் தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரப்சிம்ரன் சந்தித்த இரண்டாவது பந்திலேயே முகமது ஷமி பந்துவீச்சில் ரஷித் கானிடம் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவானும் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து களமிறங்கிய மேத்யூ ஷார்ட் அதிரடியாக விளையாடினாலும், 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 36 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். பின்னர் ஜோடி சேர்ந்த பனுகா ராஜபக்ஷா - ஜித்தேஷ் சர்மா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.