
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 54ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை களமிறங்கினர். இதில் விராட் கோல் ஒரு ரன்னிலும், அனுஜ் ராவத் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து பெஹ்ரன்டோர்ஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதையடுத்து இணைந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் - கிளென் மேக்ஸ்வெல் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கினர். தொடர்ந்து அபாரமாக விளையாடி மேக்ஸ்வெல் 25 பந்துகளிலும், டூ பிளெசிஸ் 30 பந்துகளிலும் என அடுத்தடுத்து தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.