ஐபிஎல் 2023: கோலி, ஃபாஃப், மேக்ஸ்வெல் அரைசதம்; கடின இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 15ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய விராட் கோலி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினார். இவரது அதிரடியின் மூலம் ஆர்சிபி அணி முதல் 6 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 56 ரன்களைச் சேர்த்தது.
Trending
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 61 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேசமயம் மறுமுனையில் ஃபாஃப் டூ பிளெஸிம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து சிக்சர் மழை பொழிந்த 24 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேலும் நடப்பாண்டில் இது அவரது முதல் ஐபிஎல் அரைசதமாகும்.
அதேசமயம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 44 பந்துகளில் 100 ரன்களை பாட்ர்னஷிப் முறையிலும் சேர்த்தனர். அதன்பின் 28 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 59 ரன்களைச் சேர்த்திருந்த கிளென் மேக்ஸ்வெல் கடைசி ஓவரில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 79 ரன்களைச் சேர்த்தார்.
Win Big, Make Your Cricket Tales Now