ரஷித் கான் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார் - ஹர்திக் பாண்டியா பாராட்டு!
இன்று எங்களுடைய ஆட்டத்தில் ரஷித் கான் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார். பேட்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் அவர் கலக்கினார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ரன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை மிகப் பிரகாசப்படுத்தி கொண்டுள்ளது. இப்போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் அதிரடி அரைசதம் அடித்து 218 ரன்கள் வர முக்கியக் காரணமாக இருந்தார்.
இதற்கு அடுத்து தொடர்ந்து விளையாடிய குஜராத் அணியால் 191 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களுக்கு எடுக்க முடிந்தது. அந்த அணியின் ரஷித் கான் 79 ரன்களை 32 பந்துகளில் அடித்து மிரட்டினார். இந்த வெற்றியின் மூலம் 12ஆவது ஆட்டத்தில் ஏழு வெற்றிகள் உடன் 14 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை மீண்டும் பிடித்தது மும்பை. இப்போட்டியில் சதமடித்து அசத்திய சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Trending
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இன்று எங்களுடைய ஆட்டத்தில் ரஷித் கான் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார். பேட்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் அவர் கலக்கினார். இந்த தோல்வியால் அணியில் பெருசாக எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. ஒட்டு மொத்தமாக நாங்கள் பேட்டிங் பந்துவீச்சு பில்டிங் என மூன்றிலும் சொதபினோம்.
குறிப்பாக பந்துவீச்சாளர்கள் நாங்கள் போட்ட திட்டத்தை களத்தில் செயல்படுத்த முடியவில்லை. மும்பை வீரர்களை கட்டுப்படுத்த எங்களிடையே தெளிவான பிளானும் இல்லை. அதைப் போன்று இந்த மைதானத்தில் பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்துவதெல்லாம் மிகவும் கடினம். பில்டர்களை நிறுத்த தான் என்னால் முடியும்.எப்படி பந்து வீச வேண்டும் என்று என்னால் சொல்லிக் கொடுக்க முடியாது.
நாங்கள் பந்துவீச்சில் கூடுதலாக 25 ரன்களை மும்பை அணிக்கு கொடுத்து விட்டோம். நாங்கள் இன்றைய ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருக்கலாம். ஆனால் இது மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்திருக்க வேண்டியது. ரஷித் தான் சிறப்பாக விளையாடி எங்கள் அணியின் நேட் ரன் ரெட்டை காப்பாற்றி விட்டார். சூரியகுமார் யாதவ் பற்றி அனைவரும் போதுமென்ற அளவுக்கு பேசி விட்டார்கள்.
ஏனென்றால் அவர் உலகின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர். அவருக்கு பில்டிங்கை நிறுத்துவது என்பது முடியாத காரியம். உங்களுடைய திட்டத்தில் நீங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என்றால் என்ன நடக்கும் என்று இன்று அவர் காண்பித்து விட்டார். என்னுடைய பந்துவீச்சாளர்களை தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாக்கினார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now