
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேடர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா இம்முறை சோபிக்காமல் 11 ரன்களிலேயே வெளியேறினார். இஷான் கிஷன் 15 ரன்களில் நடையைக் கட்ட அடுத்து பாட்னர்ஷிப் அமைத்த கேமரூன் கிரீன் - சூர்ய குமார் யாதவ் இணை லக்னோ பந்துவீச்சை விளாசித்தள்ளினர். இதன் எதிரொலியாக 10 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த மும்பை 98 ரன்களைச் சேர்த்தது.
2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 33 ரன்களைச் சேர்த்த சூர்யகுமார் யாதவை நவீன் உல் ஹக் அவுட்டாக்க, தன்னுடைய பாட்னரை இழந்த சோகத்தில் கேமரூன் கிரீன் அதே ஓவரில் விக்கெட்டானார். அவர் 23 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்திருந்தார். அடுத்து ஒன்றிணைந்த திலக் வர்மா - டிம் டேவிட் இணை கடமைக்கு பொறுமையாக ஆடினர்.