Advertisement

ஐபிஎல் 2023: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய வீரர்; ஆர்சிபிக்கு பின்னடைவு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாப்லி காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Advertisement
 IPL 2023: Big Blow For RCB As Reece Topley Gets Injured On Debut After Picking Up A Wicket
IPL 2023: Big Blow For RCB As Reece Topley Gets Injured On Debut After Picking Up A Wicket (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 02, 2023 • 10:38 PM

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில், இன்று நடைபெற்று வரும் 5ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளெசிஸ் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறது. இஷான் கிஷான் 10 ரன்னிலும், கேமரூன் க்ரீன் 5 ரன்னிலும், ரோஹித் சர்மா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 02, 2023 • 10:38 PM

அப்போது பவர்பிளே முடிந்து 7ஆவது ஓவரை கரண் சர்மா வீச வந்தார். அப்போது திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் களத்தில் ஆடி வந்தனர். போட்டியின் 7.3ஆவது பந்தில் திலக் வர்மா ஸ்கொயர் லெக் திசையில் பந்தை அடிக்க அங்கு பீல்டிங் செய்து கொண்டிருந்த ரீஸ் டாப்ளி பந்தை பிடிக்கும் முயற்சியில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த நிலையில், மருத்துவர்கள் வந்து பார்த்தும் காயம் அதிகம் இருந்த நிலையில், போட்டியிலிருந்து வெளியேறினார். எனினும், ஸ்கேன் பரிசோதனையில் தான் காயம் குறித்து மற்ற விவரங்கள் தெரிய வரும் என்று வர்ணனையாளர்கள் பேசிக் கொண்டனர்.

Trending

ரீஸ் டாப்ளி 2 ஓவர்கள் வீசி 14 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். அதோடு, கேமரூன் க்ரீனின் விக்கெட்டையும் யார்க்கர் மூலமாக கைப்பற்றியுள்ளார். ஏற்கெனவே அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோஷ் ஹசில்வுட் பாதி ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலையில், தற்போது ரீஸ் டாப்லியும் காயமடைந்துள்ளது பெங்களூரு அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement