-mdl.jpg)
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்க நினைத்தனர். ஆனால் 11 ரன்களை எடுத்திருந்த ரோஹித் சர்மா விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 15 ரன்களில் இஷான் கிஷானும் நடையைக் கட்டினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் - சூர்யகுமார் யாதவ் இணையும் அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் க்ரீனும் 41 ரன்களில் நவீன் உல் ஹக் பந்துவீச்சில் க்ளீன் போல்டானர்.