
IPL 2023: Chahal becomes joint highest wicket-taker in IPL history! (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட்டில் நம்பிக்கைக்குரிய பவுலர்களில் ஒருவாக சாஹல் இருந்து வருகிறார். ஒவ்வொரு மேட்ச்சிலும் எதிரணியின் முக்கிய பேட்ஸ்மேனை ஆட்டமிழக்க செய்து, அணியின் வெற்றியில் கணிசமான பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார் சாஹல்.
இந்த நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ரன்னும், ஜோஸ் பட்லர் 95 ரன்னும், கேப்டன் சஞ்சு சாம்சன் 66 ரன்களும் எடுத்தனர். அடுத்து பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி ஆட்டத்தின் கடைசி பந்தில் த்ரில்லிங்கான வெற்றியைப் பெற்றது.