ஐபிஎல் 2023: பிரியாம் கார்க்கை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
காயமடைந்த கம்ளேஷ் நாகர்கொட்டிக்கு பதிலாக முன்னாள் இந்திய அண்டர் 19 கேப்டன் பிரியம் கார்க்கை ஒப்பந்தம் செய்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 16ஆவது சீசன் விருவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக அடுத்தடுத்து விலகியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.
அதிலும் குறிப்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற இந்திய வீரர்கள் விலகியது அந்தந்த அணிகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
Trending
அதிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அனிக்கு அது மிகப்பெரும் பின்னடைவு என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ரிஷப் பந்த் இல்லாத நிலையில் டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்கிய அந்த அணி அடுத்தடுத்து முதல் 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவியதுடன், புள்ளிப்பட்டியளில் கடைசி இடத்திற்கும் தள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கம்ளேஷ் நாகர்கொட்டியும் காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக இந்திய அண்டர் 19 அணியை வழிநடத்திய பிரியாம் கார்க்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ANNOUNCEMENT
— Delhi Capitals (@DelhiCapitals) April 23, 2023
Former U-19 skipper Priyam Garg will be Kamlesh Nagarkoti's replacement for the TATA IPL 2023.
Welcome to the DC family, Priyam #YehHaiNayiDilli pic.twitter.com/UUHChs9TXw
இதனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களது அதிரகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழிநடத்திய பிரியாம் கார்க் இரண்டு ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகாக விளையாடி 251 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now