
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1 ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களையும், டெவான் கான்வே 40 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஷுப்மன் கில்லை தவிர அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் எடுத்து கொடுக்கவில்லை. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரஷித் கானும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்ததால் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டான குஜராத் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான டூவைன் பிராவோ, இறுதி போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் வந்துவிட கூடாது என தெரிவித்துள்ளார்.