ரஸலிடம் இருந்து ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வரும் என்று எதிர்பார்த்தோம் - நிதீஷ் ரானா!
நிச்சயம் உங்களால் எங்கள் அணிக்கு வெற்றி பெற்று தர முடியும் என்று நான் எப்போதுமே ரஸலிடம் கூறுவேன என கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணா தெரிவித்துள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக கேப்டன் ஷிகர் தவான் 57 ரன்களையும், ஷாருக்கான் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தலா 21 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Trending
இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக நிதீஷ் ராணா 51 ரன்களையும், ஆண்ட்ரே ரசல் 42 ரன்களையும் எடுத்து அசத்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆண்ட்ரே ரஸல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதீஷ் ராணா, “நான் பேட்டிங் செய்ய செல்லும்போது ஒருபுறம் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் வெங்கடேஷ் ஐயர் இன்று பேட்டிங் செய்யும் அவ்வளவு சௌகரியமாக இல்லை. பத்து போட்டிகளை கடந்து விட்டோம் நிச்சயம் ரஸலிடம் இருந்து ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வரும் என்று எதிர்பார்த்தோம். அந்த வகையில் இன்று அவருடைய சிறப்பான ஆட்டம் வெளிவந்தது. இது போன்ற ஒரு இன்னிங்சை அவர் விளையாடிவிட்டால் மிகச் சிறப்பான ஃபார்மிற்கு திரும்பி விடுவார்.
கொல்கத்தா அணிக்காக நீங்கள் நிறைய செய்துள்ளீர்கள். நிச்சயம் உங்களால் எங்கள் அணிக்கு வெற்றி பெற்று தர முடியும் என்று நான் எப்போதுமே ரஸலிடம் கூறுவேன். அந்த வகையில் இன்று எங்களது சொந்த மைதானத்தில் விளையாடுவது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. இருந்தாலும் இந்த போட்டியில் எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் பந்துவீச்சு டெத் ஓவர்களில் மிகவும் மோசமாக இருந்தது.
அதிலும் குறிப்பாக கடைசி கட்டத்தில் பவுலர்கள் ரன்களை விட்டுக் கொடுக்கும் போது நான் மிகவும் கோபப்பட்டேன். ஏனெனில் இந்த மைதானத்தில் 160 முதல் 165 ரன்கள் வரை தான் அடிக்கக்கூடிய ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு மேலும் பவுலர்கள் ரன்களை விட்டுக் கொடுத்து விட்டார்கள். இருந்தாலும் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now