Advertisement

டைடேவை பெவிலியனுக்கு திரும்ப சொன்னது மிகவும் மோசமான முடிவு - முகமது கைஃப்!

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஜித்தேஷ் சர்மாவை ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேற செய்தது மோசமான முடிவு என முகமது கைஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.  

Advertisement
IPL 2023: 'Extremely Poor Decision To Ask Him To Come Out', Kaif Slams Pbks For Retiring Out Atharva
IPL 2023: 'Extremely Poor Decision To Ask Him To Come Out', Kaif Slams Pbks For Retiring Out Atharva (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 18, 2023 • 12:36 PM

நேற்று பிளே ஆப் வாய்ப்புக்கான முக்கிய போட்டியில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப், டெல்லியை எதிர்த்து தர்மசாலாவில் விளையாடிய போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இதில் டாஸை இழந்து முதலில் விளையாடிய டெல்லி அணிக்கு கேப்டன் வார்னர், ப்ரீத்திவி ஷா, ரைலி ரூசோ ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வழங்க 20 ஓவர்களில் 213 ரன்கள் கிடைத்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 18, 2023 • 12:36 PM

தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு லிவிங்ஸ்டன் அதிரடியான ஆட்டத்தை ஒரு முனையில் வெளிப்படுத்தினார். இன்னொரு முனையில் இளம் வீரர் அதர்வா டைடே அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார். சிறப்பாக ஒத்துழைப்பு தந்து விளையாடிவந்த அதர்வா டைடே 42 பந்தில் 55 ரன்கள் எடுத்திருந்த பொழுது 16ஆவது ஓவருக்கு முன்பாக அவர் ரிட்டையர்டு அவுட் முறையில் உள்ளே அழைக்கப்பட்டார். 

Trending

அவருக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மா களத்திற்கு வந்தார். ஆனால் அவர் ஒரு ரன்னக்கூட அடிக்காமல் டக் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். இதன் காரணமாக பஞ்சாப் அணி இறுதிவரை போராடியும் வெற்றியை ஈட்டவில்லை. இந்நிலையில், தற்போது இது குறித்து முகமது கைஃப் தனது கண்டனத்தை கடுமையாக முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய முகமது கைஃப், “அவரை வெளியே வர சொன்னது மிகவும் மோசமான முடிவு. ரிங்கு சிங் மற்றும் ராகுல் திவாட்டியா இருவரையும் நாம் எதற்காக பேசுகிறோம்? ரிங்கு சிங் பந்துக்குப் பந்து ரன் அடித்து இருந்தார், ராகுல் திவாட்டியா 21 பந்தில் 13 ரன்கள் எடுத்திருந்தார், ஆனால் அதற்குப் பிறகுதான் அவர்கள் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் அடித்தார்கள்.

அதர்வா 130 ஸ்ட்ரைக்ரேட்டில், லிவிங்ஸ்டன் உடன் சேர்ந்து ஒரு செட் பேட்டராக இருந்தார். லிவிங்ஸ்டன் வேகமாக விளையாடினார். அதர்வா தனது பங்கை சிறப்பாக செய்தார். அவர் அன்கேப்டு வீரராக இருந்து பவுண்டரி சிக்ஸர்களை அடித்தார். அவர் அடித்து ஆடத் துவங்கும் பொழுது அவரை வெளியே அழைத்தீர்கள். இது மிக மோசமான முடிவு. 

அவருக்குப் பின் வந்த ஜித்தேஷ் சர்மா, கரன், ஷாருக்கான் எல்லோரும் தொடர்ச்சியாக வெளியேறினார்கள். முடிவு நன்றாக இருந்திருந்தால் நான் பாராட்டி இருப்பேன். புள்ளி விவரங்களைச் சரி பார்த்தால். ஒரு செட் பேட்டர் வெளியே வரும்படி அழைக்கப்பட்டு, ஒரு புதிய பேட்டர் உள்ளே வந்து எத்தனை முறை போட்டியில் வென்று இருக்கிறார்? புள்ளி விவரங்களைக் காட்டுங்கள். நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement