
கடந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டு கேப்டனாக செயலாற்றிய ஸ்ரேயாஸ் ஐயர், இந்த முறை முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதால், 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நிதிஷ் ரானா கேப்டனாக நேற்று அறிவிக்கப்பட்டார்.
பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறக்கப்பட்டாலும் அதிரடியாக விளையாடக் கூடிய இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 361 ரன்களை 144 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். மேலும் இந்திய அணிக்காகவும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி விளையாடியிருக்கிறார்.
இந்நிலையில், தனக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்து பேசி உள்ள நிதிஷ் ராணா “இதில் நான் யாரையும் பின்பற்ற விரும்பவில்லை. நான் என் வழியில் வழி நடத்தவே விரும்புகிறேன். நான் யாரையாவது பின்பற்ற நினைத்தால் எங்காவது நான் என்னை இழந்து விடுவேன். எனது பாணியில் அணியை முன்னோக்கி கொண்டு செல்ல ஆசைப்படுகிறேன். நான் பல கேப்டன்களின் கீழ் விளையாடி உள்ளேன். கம்பீர், இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்ரேயாஸ் தலைமையின் கீழும் விளையாடியிருக்கிறேன். நான் தாதா கேப்டன்சி கீழ் விளையாடவில்லை. ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டை எடுத்துச் சென்ற தூரம் நமக்குத் தெரியும். எனக்கு என்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்கு தெரிய வரும்.