
ஐபிஎல் தொடரில் 39ஆவது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதின. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன், ரஹமதுல்லா குர்பாஸ் களமிறங்கினர். ஜெகதீசன் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஷர்துல் தாக்கூர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் 11 ரன்னிலும், கேப்டன் நிதிஷ் ரானா 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்த நிலையில் தொடக்க வீரரான குர்பாஸ் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குஜராத் பந்துவீச்சாளர்களின் பந்தை நாளா பக்கமும் சிக்சர்களாக சிதறடித்த குர்பாஸ் அதிரடி ஆட்டத்தை விளையாடி 26 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.