Advertisement

ஐபிஎல் 2023: கிளாசென் அபார சதம்; ஆர்சிபிக்கு 187 டார்கெட்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹென்ரிச் கிளாசென் சதமடித்து அசத்தினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 18, 2023 • 21:08 PM
IPL 2023: Heinrich Klaasen's Maiden ton help SRH post a total of 186 on their 20 overs!
IPL 2023: Heinrich Klaasen's Maiden ton help SRH post a total of 186 on their 20 overs! (Image Source: Google)
Advertisement

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையவுள்ளன. ஆனாலும் இந்தாண்டு ஐபிஎல் சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

அந்தவகையில் இன்று நடைபெற்று வரும் 65ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.  இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது.

Trending


அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி இணை களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், ராகுல் திரிபாதி 15 ரன்களிலும் என மைக்கேல் பிரேஸ்வெல்லின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் மார்க்ரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதன்பின் 18 ரன்களை எடுத்திருந்த மார்க்ரம், ஷஃபாஷ் அஹ்மத் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக்கும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்ட ஹென்ரிச் கிளாசென் 49 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

அதன்பின் 51 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 104 ரன்களை விளாசிய ஹென்ரிச் கிளாசென், ஹர்ஷல் படேல் பந்திவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாரி ப்ரூக் 27 ரன்களைச் சேர்த்து உதவினார். 

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல், ஷபாஸ் அஹ்மத், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement