மார்க் வுட்டிற்கு இடமளிக்காதது ஏன்? - கேஎல் ராகுல் விளக்கம்!
சிறந்த பார்மில் இருக்கும் மார்க் வுட், ஏன் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் கே எல் ராகுல்.
லக்னோ மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் 121 ரன்கள் மட்டுமே அடித்தது.
பதிலுக்கு பந்துவீச்சில் தாக்குதலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தபோது, ஹைதராபாத் அணி மொத்தமாக சரணடைந்தது. எளிதாக 16 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ.
Trending
லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு முதல் லீக் போட்டியில் மார்க் வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவது லீக் போட்டியில் மூன்று விக்கெடுகளை கைப்பற்றினார். இரண்டு போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பார்மில் இருக்கும் மார்க் வுட் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை.
இதற்கான காரணம் என்னவென்று கே எல் ராகுல் இடம் கேட்கப்பட்டபோது பேசிய அவர், “முதலில் லக்னோ, பிறகு சென்னை, மீண்டும் லக்னோ என்று ஒரு வாரத்திற்குள் இடம் மாறிக்கொண்டே இருந்ததால், மார்க் காய்ச்சலில் இருக்கிறார். இந்த கண்டிஷனை உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அசோகரிமாக இருப்பதால் இன்றைய பிளேயிங் லெவனில் அவர் இல்லை.
போட்டிக்கு முன்பு மருத்துவர்களிடம் பேசினேன். இன்று 90% குணமடைந்துவிட்டார். அடுத்தடுத்த போட்டிகளில் இருப்பார். அவர் அணியில் இருந்தால் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பதை முதலில் இரண்டு போட்டிகளில் தெளிவாக தெரிந்துவிட்டது. இனி தொடர்ந்து விளையாடுவார்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now