எனது டி20 கிரிக்கெட் கெரியர் முடிந்து விட்டதா? - விமர்சித்தவர்களுக்கு விராட் கோலியின் பதிலடி!
எனது டி20 கிரிக்கெட் கெரியர் முடிந்து விட்டதாக சிலர் நினைக்கிறார்கள். எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என விராட் கோலி தன்னைப்பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஓபனர் விராட் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 101 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 197/5 ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் ஓபனர் ஷுப்மன் கில் 104 ரன்களையும், விஜய் சங்கர் 53 ரன்களையும் என இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி அசத்தினார்கள். மேலும், ஆர்சிபி அணி எக்ஸ்ட்ராவாக 19 ரன்களை விட்டுக்கொடுத்தது. இதனால், குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 198 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
Trending
நேற்றைய தோல்வி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை லீக் சுற்றில் இருந்து வெளியேற்றி விட்டது. அதே சமயத்தில் குஜராத் அணியின் வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணியை பிளே ஆப் சுற்றுக்குள் கொண்டு வந்து இருக்கிறது.
சதம் அடித்ததற்கு பிறகு பேசிய விராட் கோலி “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இப்படித்தான் டி20 கிரிக்கெட் விளையாடுகிறேன். இடைவெளிகளை கண்டுபிடித்து நிறைய பவுண்டரிகள் அடிக்கிறேன். பின்னர் சூழ்நிலைகள் என்னை அனுமதித்தால் பெரிய ஷாட்களுக்கு போகிறேன்.
சூழ்நிலையைப் படித்து சூழ்நிலை என்ன கேட்கிறதோ அதற்கு ஏற்றவாறு விளையாட வேண்டும். நான் நன்றாக உணர்ந்தேன். எனது டி20 கிரிக்கெட் முடிந்து விட்டதாக சிலர் நினைக்கிறார்கள். எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. நான் மீண்டும் எனது சிறந்த டி20 கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now