
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48ஆவது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 17.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் 30 ரன்கள் குவித்தார். குஜராத் அணி சார்பாக பந்துவீச்சில் ரஷித் கான் மூன்று விக்கெட்டுகளையும், நூர் அகமது இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 119 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் துவக்கிரர் விரிதிமான் சாஹா 41 ரன்களுடனும், ஹார்டிக் பாண்டியா 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அதோடு தொடக்க வீரர் ஷுப்மன் கில்லும் 36 ரன்கள் குவித்திருந்தார்.