
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்று வரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக பேட்டிங் செய்து 204 ரன்களை எடுத்திருக்கிறது. குஜராத் சார்பில் தமிழக வீரர்களான சாய் சுதர்சனும் விஜய் சங்கரும் சிறப்பாக விளையாடினர். இதில் சாய் சுதர்சன் 38 பந்துகளில் 53 ரன்களையும் விஜய் சங்கர் 24 பந்துகளில் 63 ரன்களையும் எடுத்திருந்தார்.
விஜய் சங்கர் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடியதுடன், ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சரையெல்லாம் பறக்கவிட்டிருந்தார். நீண்ட நாள் கழித்து தாக்கம் ஏற்படுத்தும் வகையில் விஜய் சங்கர் ஒரு அரைசதம் அடித்திருக்கிறார்.
இந்நிலையில், இந்த இன்னிங்ஸ் குறித்து விஜய் சங்கர் பேசுகையில், “கடந்த சீசன் எனக்கு அத்தனை சிறப்பாக அமையவில்லை. ஆனால், குஜராத் அணி நிர்வாகம் என்னை விடுவிக்காமல் ரீட்டெய்ன் செய்தார்கள். அது ஒரு தனி நம்பிக்கையை கொடுத்தது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் உள்ளூர் போட்டிகளிலும் நன்றாக ஆடியிருந்தேன்.