
ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்றிரவு, நடைபெற்ற 65ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மிகமுக்கியமான மற்றும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு கிளாஸன் 51 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். 187 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்து வரலாறு படைத்தனர். இந்த இலக்கை எட்டுவதற்கு இவர்களது பார்ட்னர்ஷிப் மிக முக்கியமானதாக அமைந்தது. விராட் கோலி 62 பந்துகளில் 100 ரன்கள் விளாசினர். டு பிளசிஸ் 71 ரன்கள் விளாசினார். 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
அபார வெற்றி பெற்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெசிஸ் கூறுகையில், “சிறப்பாக சேஸ் செய்துவிட்டோம் அல்லவா. இதுதான் இன்று என்னுடைய ரியாக்சன் ஆக இருந்தது. இன்று முதல் இன்னிங்ஸ் முடிந்தபிறகு இந்த பிட்ச் நன்றாக பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கிறது என உணர்ந்தேன். மேலும் 200 ரன்கள் என்பது அதிக ஸ்கோராக இருக்கும். அதற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நினைத்திருந்தேன். ஏனெனில் ஸ்பின்னர்களுக்கு இந்த பிட்ச்சில் பந்து பெரிதளவில் டர்ன் ஆகவில்லை.