ஐபிஎல் 2023: கேஎல் ராகுலுக்கு 12 லட்சம் அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிய நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்கிற காரணத்திற்காக அந்த அணியின் கேப்டன் கேல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தட்டுதடுமாறி 20 ஓவர் முடிவில் 7 விக்கெடுகள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஷ்வால் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.
பின்னர் லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக ரன்களை கட்டுப்படுத்தியதால் போட்டி 20ஆவது ஒருவர் வரை சென்றது. இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. இந்நிலையில், போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீச லக்னோ அணி வீரர்கள் தவறினர்.
Trending
ஐபிஎல் விதிமுறைப்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத பவுலிங் அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் அல்லது போட்டி சம்பளத்திலிருந்து பாதி, இவற்றில் எது அதிகமோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும். மேலும் வார்னிங் கொடுக்கப்படும். லீக் போட்டிகளில் 3 வார்னிங் பெரும் அணியின் கேப்டன் ஓரிரு போட்டிகளுக்கு தடை செய்யப்பட்டுவர்.
இதன் அடிப்படையில், ராஜஸ்தன் ராயல்ஸ் அணிக்கெதிராக நடந்த போட்டியில் உரிய நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசிமுடிக்காத லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு வார்னிங் கொடுத்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். அத்துடன் 12 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சீசனில் சஞ்சு சாம்சன், பாப் டூ ப்ளசிஸ், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு தலா ஒருமுறை வார்னிங் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now