
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இந்த லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது ஆர்சிபி அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு மிக மிகச்சிறப்பாகவே இன்னிங்ஸ் அமைந்தது. வந்த முதல் ஓவரிலிருந்து அடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் விளையாடிய விராட் கோலி அரைசதம் கடந்து, 44 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் நான்கு சிக்ஸர்கள் என 61 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து உள்ளே வந்த மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் ரன்குவிப்பில் ஈடுபட்டார். இதனால் 24 பந்துகள் அரைசதம் அடித்த அவரும் 59 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கடைசிவரை களத்தில் நின்ற கேப்டன் டூ ப்ளசிஸ் 79 ரன்கள் அடிக்க ஆர்சிபி அணியின் ஸ்கோர் 212 ரன்களை எட்டியது. இந்த இலக்கை லக்னோ அணி எட்டுவதே கடினம் என்று பலரும் எண்ணினர்.
அதற்கேற்றவாறே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து 22 ரன்களுக்கு தட்டுதடுமாறி வந்தது. அந்த சமயத்தில் உள்ளே வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ், இதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதை பற்றி சற்றும் கவலை கொள்ளாமல், முதல் பந்திலேயே பவுண்டரியுடன் ஆரம்பித்தார். இவர் 30 பந்துகளில் 65 ரன்கள் அடித்து ஆட்டத்தில் பாதையை லக்னோ அணியின் பக்கம் திருப்பி நம்பிக்கை கொடுத்தார்.