
IPL 2023: Kolkata Knight Riders beat Punjab Kings by 6 Wickets! (Image Source: Google)
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளதி. இதில் இன்று நடைபெற்ற 53ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன்சிங் களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் எடுத்த பிரப்சிம்ரன்சிங் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்துவந்த பனகா ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் முலம் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 21 ரன்னில் அவுட் ஆனார். சற்று நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் ஷிகர் தவான் 47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.