
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கடத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்றுவரும் 46ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன, இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் - கேப்டன் ஷிகர் தவன் இணை களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் தவானுடன் இணைந்த மேத்யூ ஷார்ட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்ரை உயர்த்தினார்.
அதேசமயம் ஷிகர் தவான் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மேத்யூ ஷர்ட்டும் 27 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் - ஜித்தேஷ் சர்மா இணை பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி மும்பை அணி பந்துவீச்சை சிதறடித்தனர்.