Advertisement

ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது. 

Advertisement
IPL 2023, MI vs KKR Dream11 Team: Nitish Rana or Rohit Sharma? Check Fantasy XI
IPL 2023, MI vs KKR Dream11 Team: Nitish Rana or Rohit Sharma? Check Fantasy XI (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 16, 2023 • 11:36 AM

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சைநடத்துகின்றன. அதன்படி மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 16, 2023 • 11:36 AM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் 2 ஆட்டங்களில் பெங்களூரு, சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கணக்கை தொடங்காத டெல்லியை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் 173 ரன் இலக்கை கடைசி பந்தில் தட்டுத்தடுமாறி தான் எட்டிப்பிடித்தது. முதல் 2 ஆட்டங்களில் ஏமாற்றம் அளித்த கேப்டன் ரோகித் சர்மா (65 ரன்கள்) அரைசதம் அடித்தது அந்த அணிக்கு நல்ல விஷயமாகும்.

அத்துடன் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் (31 ரன்கள்), திலக் வர்மா (41 ரன்கள்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர். டிம் டேவிட், கேமரூன் கிரீன் இறுதி கட்ட நெருக்கடியை சமாளித்து அணி வெற்றி இலக்கை கடக்க உதவினர். அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் (15, 1, 0) தொடர்ந்து சோபிக்காதது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக உள்ளது. அவரது அதிரடி வாணவேடிக்கையை மீண்டும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். சொந்த மண்ணில் தனது முதல் ஆட்டத்தில் சோபிக்க தவறிய மும்பை அணி உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ஜொலிக்கும் முனைப்புடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (பெங்களூரு, குஜராத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (பஞ்சாப், ஐதராபாத் அணிகளிடம்) கண்டுள்ளது. அந்த அணியின் வெற்றிகளில் முறையே ஷர்துல் தாக்குர், ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடி முக்கிய பங்கு வகித்தது. ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி 205 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பேட்டிங்கில் நிதிஷ் ராணா (75 ரன்கள்), ரிங்கு சிங் (58 ரன்கள்), ஜெகதீசன் (36 ரன்கள்) ஆகியோர் கலக்கினாலும் பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் தவிர மற்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. அந்த அணி பந்து வீச்சு பலவீனத்தை சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும். வலுவான இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் ரன் வேட்டை விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 31
  • மும்பை இந்தியன்ஸ் - 22
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 09

உத்தேச லெவன் 

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஷம்ஸ் முலானி / ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, அர்ஷத் கான் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் / ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரஹ்மானுல்லா குர்பாஸ், என் ஜெகதீசன், நிதிஷ் ராணா (கே), வெங்கி ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி மற்றும் லாக்கி பெர்குசன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் 

  • விக்கெட் கீப்பர்: இஷான் கிஷன் (கே)
  • பேட்டர்ஸ்: ரோஹித் சர்மா, திலக் வர்மா, நிதிஷ் ராணா, ரிங்கு சிங்
  • ஆல்ரவுண்டர்கள்: சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல், கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள்: உமேஷ் யாதவ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், வருண் சக்ரவர்த்தி

கேப்டன்/துணை கேப்டன் - ரோஹித் சர்மா, ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷன்
 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement