
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், நாளை (டிசம்பர் 23) கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டிருந்தது.
அதன்படி அனைத்து அணிகளும் அது குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. சர்வதேச களத்தில் முத்திரை பதித்த பல முக்கிய வீரர்களுக்கு ஐபிஎல் அணி நிர்வாகங்கள் விடுவித்துள்ளன. இருந்தாலும் இதில் சில விடுவிப்புகள் வீரர்களுக்கான ஏல தொகையை குறைத்து, மீண்டும் அணியில் சேர்வதற்கான நடவடிக்கையாக கூட இருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படி அடுத்த சீசனுக்காக 10 ஐபிஎல் அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் மற்றும் கைவசம் உள்ள தொகையின் முழு விவரத்தைப் பார்ப்போம்.