
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருத்ராஜ் 24, மற்றும் கான்வே 10 ரன் என வெளியேறினார்கள்.
அடுத்து வந்த ரகானே 21, மொயின் 7, சிவம் துபே 25, அம்பதி ராயுடு 23, ரவீந்திர ஜடேஜா 21 ரன்களில் வெளியேறினார்கள். தீபக் சகர் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். துஷார் தேஷ் பாண்டே ஆட்டம் இழக்காமல் ரன் எடுக்காமல் இருந்தார். அதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது வழக்கமான ஆட்டத்தை இன்றைய போட்டியிலும் வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
#MSDhoni is out to collect a ton of #Yellove for his explosive batting #CSKvDC #ThalaDhoni #IPLonJioCinema #IPL2023 #TATAIPL #WhistlePodu |@ChennaiIPL @msdhoni pic.twitter.com/z9nAtWduku
— JioCinema (@JioCinema) May 10, 2023