
ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி தனது 16ஆவது ஆண்டில் விளையாடி வருகிறார். தோனியை சில ரசிகர்கள் மெதுவாக விளையாடி வருகிறார் என விமர்சிப்பது உண்டு. ஆனால் அவர்களுக்கு தோனி எத்தகைய ரெகார்டுகளை ஐபி எல் கிரிக்கெட்டில் வைத்திருகிறார் என்று தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
நேற்று கூட சிஎஸ்கே அணி தடுமாறிய போது கடைசி கட்டத்தில் 7 பந்துகளை எதிர் கொண்ட தோனி 14 ரன்கள் அடித்தார். இதில் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 178 ரன்கள் என்ற கவுரவமான இலக்கு எட்டியது.
இந்த நிலையில் நேற்று ஆட்டத்தில் மட்டும் தோனி மூன்று மைல்கல்லை எட்டிருக்கிறார். அதாவது சிஎஸ்கே அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்று பெருமையை பெற்றது மட்டுமல்லாமல் 200 சிக்சர்களை சிஎஸ்கே அணிக்காக தோனி அடித்து இந்த மைல் கல்லை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.