IPL 2023 - Mumbai Indians vs Sunrisers Hyderabad, Preview, Expected XI & Fantasy XI Tips! (Image Source: Google)
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தங்களுக்கான 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு மூன்று அணிகளுக்கு இடையேயா கடும் போட்டி நிலவி வருகிறது.
அந்தவகையில் இன்று நடைபெறும் 69ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது. இப்போட்டியில் மும்பை அணி அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
- இடம் - வான்கடே மைதானம், மும்பை
- நேரம் - மாலை 3.30 மணி