
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பதற்கு 214 ரன்கள் குவித்தனர். 215 ரன்கள் இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதன்பின் இறுதியில், டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் மிகச்சிறப்பான ஆட்டத்தை அப்படியே எடுத்துச் சென்று பினிஷ் செய்து கொடுத்தனர். இதன்மூலம் 18.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த வெற்றி பெற்ற அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “2006-07ஆம் ஆண்டுகளில் டி20 போட்டிகள் துவங்கிய காலத்தில் 150 ரன்கள் அடித்தாலே அது வெற்றி பெறக்கூடிய ஸ்கோர். இப்போது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருப்பது மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கிறது. நான் ஆராய்ந்து பார்த்த போது, இந்த சீசனில் சராசரி ஸ்கோர் 180 ஆகும். அந்த அளவிற்க்கு மாறிவிட்டது.