
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நாளையுடன் நிறைவடைந்து, பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளன. இதில் இன்று ஈடன் கார்டன்ஸ் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 68ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் - கரன் சர்மா இணை களமிறங்கினர். இதில் கரன் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தர். அதன்பின் டி காக்குடன் இணைந்த மான்கட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் 26 ரன்களில் மான்கட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரன்கள் ஏதுமின்றியும், குர்னால் பாண்டியா 9 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அதுவரை நிதானமாக விளையாடி வந்த குயின்டன் டி காக்கும் 28 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.