
ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத்துலுள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியும் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்று வாய்ப்பில் தொடர்கிறது. அதே சமயத்தில் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறி இருக்கிறது.
இப்போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்ய வந்த ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா 7, அன்மோல்ப்ரீத் சிங் 36, ராகுல் திரிபாதி 20, எய்டன் மார்க்ரம் 28, கிளாசன் 48, பிலிப்ஸ் 0, அப்துல் சமத் 37, புவனேஸ்வர் குமார் 2 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன் சேர்த்தது.
பத்து ஓவர்களுக்கு பிறகு லக்னோ மணிக்கு பந்து வீச வந்த அந்த அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா அடுத்தடுத்த பந்துகளில் மார்க்கம் மற்றும் பிலிப்சை வெளியேற்றியது, இந்த ஆட்டத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இவர் நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்.