
கடந்த 2008 முதல் வருடம் ஒருமுறை ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. உலகிலேயே மிகவும் முக்கியமான தொடராகவும் முன்னேறிவருகிறது. மேலும் மற்றைய கிரிக்கெட் தொடர்களை விடவும் அதிகப் பரிசுத் தொகையை அளிப்பதாகவும் ஐபிஎல் வளர்ந்துள்ளது. அந்த கவகையில் 2008 இல் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.4.8 கோடியும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2.4 கோடியும் வழங்கப்பட்டது.
இது தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடியும் வழங்கப்படும். 3ஆவது (மும்பை) மற்றும் 4ஆவது (லக்னோ) இடங்களை பிடித்த அணிகள் முறையே ரூ. 7 கோடி, 6.5 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.46.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இனிவரும் காலங்களில் இதை விடவும் அதிகப் பரிசுத் தொகை வழங்கலாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு (ஆரஞ்சு கேப்), அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கு (பர்பிள் கேப்) தலா 15 இலட்சமும், வளர்ந்துவரும் வீரர் விருதிற்கு ரூ.20 இலட்சமும் வழங்கப்படுகிறது.