ஐபிஎல் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் வலிமை வாய்ந்த ராஜஸ்தான் அணியை எதிர்த்து முதல் வெற்றிக்காக போராடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடி வருகிறது. கௌகாத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி ராஜஸ்ஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஷ்வால் - ஜோஸ் பட்லர் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் முதல் பந்திலிருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஷ்வால் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 60 ரன்களில் யஷஸ்வி ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் இந்த சீசனில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.