
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச தீரமானித்தார்.
அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை களமிறங்கியனர். வழக்கம்போல இந்த அணி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் 22 ரன்களில் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆட்டமிழந்து ஏற்றமளித்தார்.
இதையடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த மஹிபால் லம்ரோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 3ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய கையோடு, லலித் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.